fbpx

இலங்கை என்பது நம் தாய்த் திருநாடு – Ilangai Enbathu – Sri Lankan Tamil Song of 70s – 80s



#எம்மவர்இசைமழை

70- 80களில் எம்மவர் துள்ளிசைப் பாடல்கள்

1950களில் ஜனரஞ்சன இசையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தவர், “பைலா பாடல்களின் மன்னன்” என்று இரசிகர்களால் கௌரவிக்கப்பட்ட வொலி பஸ்டியன்ஸ் (Wally Bastianz). இவர் இயற்பெயர் ஒலிங்டன் மேர்வின் பஸ்டியன்ஸ். ஒலி பின்னர் வொலி என மாற்றம் பெற்றது.

இலங்கை போக்குவரத்து போலீசில் ஒரு உத்தியோகத்தராக கடமையாற்றியவர். பல இசைக் கருவிகளை இயக்கக் கூடியவர். 1957ல் இவர் இயற்றி இசையமைத்துப் பாடிய “ரடக் வடினவா மகே மவ்பிய தென்னா” அந்நாளில் உச்சம் தொட்டது. வொலி பஸ்டியன்ஸ் 1985ல் தனது 70 வயதில் இவ்வுழகில் இருந்து விடை பெற்றார்.

வொலி பாடிய பாடல்கள் இன்றும் சகோதர மொழிப் பாடகர்களால் புதிதாகப் பாடப் படுகின்றன. இவர் பாடலான ரடக் வடினவா பாடல் மெக்ஸ்வல் மெண்டிஸ் (Maxwell Mendis) பாட கிளரன்ஸ் விஜயவர்தனவின் (Clrance Wijewardene) இசை ஒருங்கமைப்பில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டது. இசை வழங்கியவர்கள் ‘கோல்டன் சைம்ஸ்’(Golden Chimes).

மெக்ஸ்வலின் அந்த இசைத் தட்டில் இடம்பெற்ற நான்கு பாடலும் வெகு பிரபலம். இவற்றில் சில பாடல்களை மனோகரன் தமிழில் பாடி அவை பட்டித் தொட்டி எல்லாம் ஒலித்தன.

1973ல் சூரியா வியாபார இலச்சினையில் வெளிவந்த ஒரு EPயில் கிளரன்ஸின் இசை ஒருங்கமைப்பில் மனோகரன் வழமை போல் தானே இயற்றிப் பாடிய நான்கு பாடல்கள் வெளிவந்தன. பாடல்கள் சரசவிய ஒலிப்பதிவு கூடத்தில் மேர்வின் ரொட்ரிகோவினால் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இசை வழங்கியவர்கள் ‘சுப்பர் கோல்டன் சைம்ஸ்’ (Supper Golden Chimes). அவற்றில் ஒன்று இத்துடன் தரவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் ‘இலங்கை என்பது’ எனும் பாடல்.

வொலி பஸ்டியன் தன் பெற்றோரைப் போற்றிப் பாடியிருந்தார், மனோகரன் தான் பிறந்த நாட்டை போற்றிப் பாடுகிறார்.

மனோ புலம் பெயர்ந்து வாழ்ந்த காலகட்டத்தில் காலத்தின் தேவை கருதி பாடல் வரிகளில் சில மாற்றங்களுடன் மேடைகளில் பாடிவந்தார். ஒரு முறை தலை நகர் கொழும்பிலும் அதே வரிகளுடன் பாடினார். அந்த ஒலிப்பதிவும் கைவசம் உண்டு எனினும் முலப்பாடல்களுக்கு “முன்னுறுமை” எனும் விதிக்கமைய மூலப்பாடலான இப்பாடலை தரவேற்றம் செய்கிறோம்

பாடல் – இலங்கை என்பது நம் தாய்த் திருநாடு

இயற்றிப் பாடியவர் – ஏ. ஈ. மனோகரன்

மெட்டு – வொலி பஸ்டியன்ஸ்

இசை – கிளரன்ஸ் விஜயவர்தன

Source

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: